Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...!!

 


நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில், எதிர்நோக்கப்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி முக்கியமானதாகும்.

கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சிறந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments