Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் 500ஜ அண்மிக்கும் மரணங்கள்:அம்பாறை ஆபத்தில்.. 27201தொற்று:447 மரணம்


 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்குமாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 500ஜ அண்மிக்கிறது. நேற்றுவரை மரணங்களின் எண்ணிக்கை 447 ஆகியுள்ளது. மூன்றாம் அலையில் மட்டும் 421 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கில் தொற்றுக்களின் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 27201தொற்றுகளும் 421மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 24 மணிநேரத்தில் 618தொற்றுகளும் , 07மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது .

கிழக்கு மாகாணத்தில் இதுவரைகாலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் 618 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் . நேற்றைய தினம் ஏற்பட்ட 618 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 317தொற்றுக்களும் ,கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 79தொற்றுக்களும் ,திருகோணமலை மாவட்டத்தில் 07தொற்றுக்களும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 215தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளன.


அம்பாறை ஆபத்தில்..



கிழக்கில் அண்மைக்காலமாக அம்பாறைப்பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த இருநாட்களில் 200ஜத்தாண்டிய தொற்றுக்கள் நேற்று அவ்வெண்ணிக்கை 317ஆக உய்ர்ந்துள்ளது.

அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 102 தொற்றுக்கள் தெஹியத்தகண்டியவிலும் ,57 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் 56அம்பாறை நகரப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 19தொற்றுக்கள் பொத்துவில் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 51ஆயிரத்து 664தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

Post a Comment

0 Comments