Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரே நாளில் இலங்கையில் 3806 பேருக்கு நேற்று கொவிட் தொற்று


 இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 806 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


தொடர்ச்சியாக 8ஆவது நாளாக 3 ஆயிரத்து மேற்பட்ட தொற்றாளர்கள் தினசரி அடையாளம் காணப்படுகின்றனர்.

இதன்மூலம் நாட்டில் தற்போது 47 ஆயிரத்து 847 தொற்றாளர்கள் வைத்தியசாலைகள், இடைத்தங்கல் மையங்கள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் அதிகளவு தொற்றாளர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

நாட்டில் 2020 ஜனவரி தொடக்கம் நேற்று வரை 3 இலட்சத்து 73 ஆயிரத்து 165 தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 இலட்சத்து 18 ஆயிரத்து 714 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 604 பேர் உயிரிழந் துள்ளனர்.

Post a Comment

0 Comments