Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மறு அறிவித்தல் வரை காத்தான்குடி தபாலகம் மூடப்பட்டுள்ளது !

 


காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி தபாலகம் மூடப்பட்டுள்ளது.


காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மற்றுமொரு ஊழியருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அதேவேளை, மேலும் ஒரு ஊழியருக்கும் கொரொனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, காத்தான்குடி தபாலகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments