Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

 


மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


குறித்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன தெரிவித்தார்.

எருவில் கோடைமேடு கிராமத்தை சேர்ந்த இருவர் இன்று (வியாழக்கிழமை) காலை 9.20 மணியளவில் அட்டாளைச்சேனைக்கு பயணித்தவேளை, ஓந்தாச்சிமடம் கிராமத்தின் உள்வீதியாக வந்த பெண்ணொருவர் பாதையைக் கடப்பதற்கு முற்படுகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 60 வயதுடைய வயோதிபத்தாய் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29, 53வயதுடைய இருவருமாக மூவர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Post a Comment

0 Comments