செ.துஜியந்தன்
இன்று(15) வைத்தியர் கே.பி.சாமித்தம்பி எழுதிய கல்முனை மாநகரின் ஸ்ரீ ஐயனார் தேவஸ்தானம் சரிதம் கூறும் நூல்வெளியீட்டு விழா ஆலய தலைவர் பி.தவராஜா தலைமையில் ஐயனார் ஆலய முன்றலில் நடைபெற்றது.. நுலின் முதற்பிரதியினை கல்முனை ஸ்ரீ சந்தானஈஸ்வரர் ஆலய பிரதமகுலு சிவஸ்ரீ தவசீலன் குருக்கள் பெற்றுக்கொண்டார்.
இற்றைக்கு ஐந்நூறு வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ; ஐயனார் தேவஸ்தானம் சரிதம் பற்றிய இந்நூலில் கல்முனைத் தமிழர்களின் பூர்விகம், அதனோடு தொடர்புபட்ட வரலாற்றுத் தகவல்கள் ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன், தொழிலதிபர் கே.லிங்கேஸ்வரன், கல்முனை சந்தானஈஸ்வரர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ தவசீலன் குருக்கள், அகரம் கலைக்கழகத்தின் தலைவர் செ.துஜியந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு நூலாசிரியர் வைத்தியர் கே.பி.சாமித்தம்பி காவியக்கலைஞர் எ;னும் கௌரவப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது
0 Comments