Advertisement

Responsive Advertisement

கல்முனைப்பிராந்தியத்தில் 79 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

 


கல்முனை பிராந்தியத்தில்  இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள் கொவிட் 19 நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் . 

கூடுதலாக அக்கரைப்பற்றில் 15பேரும் பொத்துவிலில் 13பேரும் சம்மாந்துறையில் 11பேரும் ஏனைய பிரதேச ங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொவிட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தடுப்பூசி இரண்டாம்கட்டம் இன்று ஆரம்பம்.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்திற்கான இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று வியாழக்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதற்கென 1லட்சத்து 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வந்துசேர்ந்துள்ளன.அவற்றை இன்று(29) முதல் சகல 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி ஞாயிறு இருதினங்களிலும் 50ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தெரிந்ததே.

கர்ப்பிணி பெண்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை ஏற்றி கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தபட்டுள்ளது 

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07ஆதாரவைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேடமையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும்.

முன் ஏற்பாட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 30வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. முதலாம்கட்டத்தில் தவறவிட்டவர்கள் இன்றுமுதல் அதனை ஏற்றிக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments