Home » » சதுரங்க போட்டியில் சாதனை படைத்தார் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய தரம் 03 மாணவி !

சதுரங்க போட்டியில் சாதனை படைத்தார் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய தரம் 03 மாணவி !

 


(ஷமி.மண்டூர்)

இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'National Rapid championship 2021 Novice’ திறந்த சுற்றுப்போட்டிகளில் ஒரு பிரிவாக வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை இணைத்ததான பெண்கள் பிரிவுப் போட்டிகள் கடந்த ஜீலை 17,18ம் திகதிகளில் நடைபெற்றது.

இதில் மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவியான செல்வி ரித்திகா ஷமி-ரஜனிக்காந் அவர்கள் 7 சுற்றுக்கள் கொண்ட போட்டியில் 6 சுற்றுக்களில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.

இவர்‘Singing fish chess club’வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இப்போட்டியில் முதல் 14 இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் அடுத்தகட்ட போட்டிகளான'‘NationalRapid championship 2021 Majors divison’ போட்டிகளில் பங்குபெறும் தகுதியினை பெற்றுள்ளனர். 

இவர்களின் வெற்றிகளுக்கு பயிற்றுவிப்பாளர் ஏ.சௌத்திரி அவர்களின் சிறப்பான பயிற்றுவிப்பும் வழிகாட்டல்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |