Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் சில மாதங்கள் இலங்கையை முழுமையாக முடக்கும் நிலை - பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

 


நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்களை போன்று செய்துகொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது இரண்டு வாரங்களில் மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை கடிதங்களை அனுப்பி அத்தியாவசிய சேவையற்ற பலரை பணிக்கு அழைக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments