Home » » வியாழேந்திரனின் வீட்டிற்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு- நீர் தாரை பிரயோக வாகனங்களும் நிறுத்தம்!

வியாழேந்திரனின் வீட்டிற்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு- நீர் தாரை பிரயோக வாகனங்களும் நிறுத்தம்!

 


ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் வீதியால் சென்ற தனது சகோதரனை அழைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

முன்பகை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை முதல் மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு இன்று காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா காவல்துறையினர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு இடம்பெற்ற இடத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் நேரில் சென்று பார்வையிடப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் முன்பகை காரணமாகவே துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நேரில் கண்ட முச்சக்கர வண்டி சாரதி செல்லத் தம்பி விஜயராஜா ஊடகங்களுக்கு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |