Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வைத்தியரின் தில்லுமுல்லு அம்பலம்! 300 தடுப்பூசிகளுக்கு நடந்தது என்ன?


துறைமுக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 டோஸ் தடுப்பூசிகளை துறைமுக அதிகார சபையின் பிரதான வைத்திய அதிகாரி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீன துறைமுக ஊழியர் சங்கம் இன்று வௌிப்படுத்தியது.

இந்த விடயத்தினை சுயாதீன துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவ வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த வைத்தியரால் ஒரு டியூபில் இருந்து 12 முதல் 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீதப்படுத்திக் கொண்ட சுமார் 300 டோஸ் தடுப்பூசிகளை அவரின் உறவினர்களுக்கு மற்றும் நெருங்கமானவர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வைத்தியர் தற்போது கட்டாய விடுமுறையில் உள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments