Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பயணத் தடை தளர்வின் போது தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு

 


நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 21ம் திகதி திங்கள் கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

எனினும் பேருந்து சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 21ம் திகதி காலை நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணத் தடை அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,தொடருந்து சேவையின் போது, கடந்த காலங்களில் மாகாணங்களுக்கிடையே பின்பற்றப்பட்ட முறையே இந்த தடவையும் பின்பற்றப்படவுள்ளதாக காமினி செனவிரட்ண குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்தும் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments