Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாளைய பயணத்தடை தளர்வில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும்? வெளியானது சுகாதார வழிகாட்டி

 


நாளையதினம் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர், மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்த சுகாதார வழிகாட்டியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டார்.

இதன்படி, வீட்டிலிருந்து இருவர் மாத்திரமே வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விபரம் வருமாறு,

அலுவலக பணிகளுக்கு குறைந்த அளவான ஊழியர்களையே அழைக்க முடியும்.

வீட்டில் இருந்து வேலை செய்ய முடிந்தவர்களே அதனை கடைபிடிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

அனைத்து நபர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும்.

விசேட தேவைகளுக்காக மாத்திரமே மாகாணங்கள் கடந்து பயணிக்க முடியும்.

விருந்துகள், களியாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது.

பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது.

இவற்றை கடைபிடிக்க தவறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


Gallery Gallery 

Post a Comment

0 Comments