Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி


நாடு முழுவதும் நாளை அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தது.

இணையவழியில் மதுபானங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்ட போதும், சுகாதார தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து அத்தீர்மானம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments