எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் குறுகியகால திட்டங்கள் மற்றும் பொருளாதார முகாமைத்துவ பலவீனங்களினால் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வாழ்க்கை செலவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நல்ல கொள்கைகளை நிராகரித்ததன் பலன்களே தற்பொழுது பொதுமக்கள் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடுகிறது.
2018ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலைப் பொறிமுறைமை அமுலில் இருந்திருந்தால் மக்களுக்கு அதன் நன்மைகள் கிடைக்கப் பெற்றிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments