Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - விபரம் வெளியானது

 


இலங்கையில் மேலும் 62 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரவினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 2759 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,893 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரையில் 184,090 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, கொவிட் பரவல் காரணமாக ,நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments