Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- மரப்பாலம் பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி...!!

 


மட்டக்களப்பு– மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் இன்று(25) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.


இலுப்படிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய வன்னமணி கிருஸ்ணகுமார் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல் வேளாண்மைப் பயிர்ப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவேளை வயலிற்குள் நுழைந்த யானை காவலாளியைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை யானை வேலி அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments