Advertisement

Responsive Advertisement

பிளவடையும் நிலையில் பொதுஜன பெரமுன? நாட்டை வந்தடைந்த பசில்!




அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் மூலம் பசில், அவரின் மனைவி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும்  வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, கட்சிக்குள் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டிருந்தன.

அதன் போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலின் ஆதரவாளர்கள், அவர் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்காது என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆளும் கட்சிக்குள், சிறிய கட்சிகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், பங்காளி கட்சிகளுக்கு பிரச்சினை இருப்பதையும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இதுவொருபுறமிருக்க, ஆளும் கூட்டணி பிளவடையும் நிலையில் இருப்பதாகவும், அரசாங்கம் பிளவின் உச்சத்தில் இருப்பதாகவும் எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Post a Comment

0 Comments