நாட்டில் ஆசிரியர் ஆலோசகர் சேவை உள்ளீர்ப்புக்கான ஆசிரியர்களின் தகவல்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.2020.08.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 21/2020 ஆம் இலக்க ஆசிரியர் ஆலோசர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான சுற்றுநிருபத்திற்கு ஏற்ப, ஆசிரியர் ஆலோசகர் பதவிக்கான உள்ளீர்ப்பு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இச்சேவைக்கான பிரமாணக் குறிப்பின் 7 ஆம் சர்த்தின் படி ஆசிரியர் ஆலோசகர் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்த்து, கல்வி அமைச்சு வலயங்கள் மற்றும் மாகாணங்கள் ஊடாக பொருத்தமான ஆசிரியர்களின் பெயர் பட்டியலைக் கோரியுள்ளது.
50 ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்த பட்டியலைத் தயாரித்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments