Home » » மட்டக்களப்பு- வாகரையில் மேலுமொரு கொவிட் இடைநிலை சிகிட்சை நிலையம் திந்துவைப்பு!!

மட்டக்களப்பு- வாகரையில் மேலுமொரு கொவிட் இடைநிலை சிகிட்சை நிலையம் திந்துவைப்பு!!

 


கொவிட் தொற்றினை கருத்திற் கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 கட்டில் தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மேலுமொரு கொரோனா சிகிச்சை பிரிவொன்று வாகரை மாவட்ட வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
 
இவ்இடை நிலை வைத்திய நிலையம் என அழைக்கப்படும் தரம் -111 இற்கான திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தௌபிக், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார வைத்தியர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோர்கள் இந்நிகழவில் கலந்து கொண்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்pல் 5 ஆவது கொரோனா சிகிச்சை நிலையமாக இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை, காத்தான்குடி, பெரிய கல்லாறு மற்றும் கரடியனாறு ஆகிய வைத்தியசாலைகளில் ஏலவே கொரோனா சிகிச்சை விடுதிகள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |