Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் கரையொதுங்கிய சிவப்பு நிற டொல்பின் மீன்

 


கல்முனை - பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளது.

சுமார் 4 முதல் 5 அடி வரை நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று(23) மீனவர்கள் கண்டுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள் பொது சுகாதார பரிசோதகர் பொலிஸார் வருகை தந்திருந்திருந்தனர்.

இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments