Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு விவகாரம் - பிள்ளையான் வெளியிட்ட தகவல்


 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயம் ஒட்டுமொத்த கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சனையாக மாறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் செய்தியாளர் வினவிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இதனை முஸ்லிம் மக்கள் அவர்களுடைய அத்தியாவசியமான இருப்பு சம்மந்தமாக அவர்கள் பார்க்கிறார்கள். 1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் தான் இருந்தது. பின்னர் தான் அது பிரிந்து அம்பாறை மாவட்டமாகியது. அங்கு தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களின் நிலமை வேறுவிதமாகவும், அதபோன்று கிழக்கில் இஸ்லாமிய மக்கள் செறிந்நு வாழ்கின்ற பகுதிகளிலுள்ள அவர்களின் மதத் தலைவர்கள் மற்றும் அரசில் தலைவர்களின் கருத்துக்களும் வேறுவிதமாக இருக்கின்றன.

என்னைப் பெறுத்தவரையில், இதனை ஊடகங்களில் பேசி மக்களைச் சூடாக்கி பூதாகரமாக்காமல் - இப்பிரச்சனையை கையாண்டு தீர்த்து வைக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றேன்.

அதே சமகாலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து உப பிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. மிக நீண்ட காலடமாக இயங்கிக் கொண்டுவரும் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. என்னால் முடிந்த அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளேன்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதனை நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்கள். இருந்தாலும் தற்போதிருக்கின்ற அரசியல் சூழலும், அம்பாறையிலிருக்கின்ற அரசயில்வாதிகளின் அழுத்தங்களாலும் இது நீண்டு செல்கின்றது.

ஆனாலும் இதனை இவ்வாறு விட்டுவிடாமல் தீர்வுகாணவேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஒரு சவாலாக இருக்கும். இதனை மிகக் கவனமாகவும், பக்குவமாகவும் தீர்த்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றேன் என்றார்.   

Post a Comment

0 Comments