Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாண்டிருப்பில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி பயணிப்போருக்கு அன்டிஜன் பரிசோதனை

 


செ.துஜியந்தன்


கல்முனை வடக்கு பிராந்திய சகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான மக்களை தெளிவுபடுத்தும் பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.





கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள கிராமங்களில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்துவருகைதருவோர் ஆகியோருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று(16) பாண்டிருப்பில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி பயணிப்பவர்கள் மற்றும் நடமாடும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள், பூசாரிகள், அத்துடன் சுயதனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்;கும் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாண்டிருப்பு மாரியம்மன் கோவில் வீதியில் 50 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், 20 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தெரிவித்தார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்காகவுமே சுகாதாரப்பரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும், சுகாதாரப்பரிவினர் முன்னெடுக்கும் பணிகளுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை வேண்டுகோள்விடுத்துள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் பாண்டிருப்பில் 19 பெர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments