Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலையேற்றத்தின் உண்மையை போட்டுடைத்த அமைச்சர்! வெடித்தது புதிய சர்ச்சை

 


எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

எரிபொருட்களுக்கான விலை உயர்வுக்கு நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பிறகு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

"நிதியமைச்சராக பிரதமர் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் கூறிய கூற்றுக்களை அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்தார்,

இதேவேளை, இந்த கடிதம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே சவால் விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments