இலங்கையில் கொரோனா தொற்று அதனாலேற்பட்பட்டுள்ள பயணத்தடை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் சத்தம் சந்தடியின்றி மிகவும் அதிதியாவசிய தேவையான பொருளொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிறீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது. இவ் விலை அதிகரிப்பு நேற்று முதல் அமுலாகும் வகையில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய ரொட்டிக்கான கோதுமை மா ஒரு கிலோகிராம் 4 ரூபாவினாலும், பிஸ்கட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனத்தின் வர்த்தக பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
உலக சந்தையில் மாவின் வகைகளின் விலை அதிகரித்தமையே உள்ளூரில் அவற்றின் விலையை அதிகரிக்க காரணம் என பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் பிறீமா நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
0 Comments