இலங்கையில் கொவிட் தொற்றுறுதி எண்ணிக்கையுடன் நாளாந்தம் உறுதி செய்யப்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய 9 ஆம் திகதி புதன்கிழமை 67 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள்முதல் நாளொன்றில் பதிவான மரணங்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். நேற்று இம்மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இவை மே 17 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை 19 கொவிட் மரணங்களும் ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதுவரையில் இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
நேற்று (09) உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன், ஏறாவூர், நுவரெலியா, பசறை, அம்பாறை, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தல, மாத்தளை, வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புஸ்ஸல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு-07, கலகெதர, களுத்துறை, கொழும்பு-10, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை ஆகிய இடங்களிலும் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி மே 17 - 03 மரணங்கள்
மே 19 - 02 மரணங்கள்
மே 20 - 03 மரணங்கள்
மே 21 - 01 மரணம்
மே 22 - 04 மரணங்கள்
மே 23 - 01 மரணம்
மே 24 - 01 மரணம்
மே 26 - 01 மரணம்
மே 27 - 01 மரணம்
மே 31 - 02 மரணங்கள்
ஜூன் 01 - 02 மரணங்கள்
ஜூன் 02 - 05 மரணங்கள்
ஜூன் 03 - 05 மரணங்கள்
ஜூன் 04 - 05 மரணங்கள்
ஜூன் 05 - 10 மரணங்கள்
ஜூன் 06 - 09 மரணங்கள்
ஜூன் 07 - 08 மரணங்கள்
ஜூன் 08 - 04 மரணங்கள்
உயிரிழந்தவர்களின் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ் - 01
வயது 20 - 29 - 02
வயது 30 - 39 - 01
வயது 40 - 49 - 03
வயது 50 - 59 - 05
வயது 60 - 69 - 16
வயது 70 - 79 - 19
வயது 80 - 89 - 18
வயது 90 - 99 - 02
வயது 99 இற்கு மேல் - 00
உயிரிழந்த இடங்கள்; வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 06 வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 05 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 56
உயிரிழந்தமைக்கான காரணங்கள் கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, மூளையில் ஏற்பட்ட குருதிக் கசிவு உயர் குருதியழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, மூளை நோய், இதயநோய், சுவாசக் கோளாறு, சிறுநீரகம் மோசமாகப் பாதிக்கப்பட்டமை, பல தொகுதிகள் செயலிழந்தமை, மாரடைப்பு, நாட்பட்ட நுரையீரல் நோய், மோசமான சுவாசக் கோளாறு, புற்றுநோய், குருதியுறைதல், பக்கவாதம், நாட்பட்ட சிறுநீரக நோய், மூச்சிழுப்பு, டிஸ்லிப்பிடேமியா, நீரிழிவு, குருதி நஞ்சானமை, ஹசிமோடோஸ் நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற நிலைமைகள்.
0 Comments