Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது...!!

 


சியம்பலான்டுவ ஹெடஓய பாலத்தின் அருகில் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பிலிருந்து சியம்பலான்டுவ நோக்கி பயணித்த சிற்றுந்து ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 சந்தேக நபர்களிடமிருந்து 151 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சாரதி மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

23,51,54,60 மற்றும் 61 வயதான குறித்த சந்தேக நபர்கள் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் சியபலான்டுவ நீதிவான் முன்னிலையில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments