Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நேற்று மாத்திரம் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் கைது- தகவல் வழங்க துரித இலக்கம் அறிமுகம்...!!

 


நேற்றைய தினம் (24) மாத்திரம் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் குளியாப்பிட்டிய பகுதியில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை நடமாட்ட கட்டுப்பாட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பில் தகவல் வழங்க 1997 எனும் துரித இலக்கத்தை காவல்துறை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments