Advertisement

Responsive Advertisement

தற்போது உள்ள நிலைமையில் பாடசாலைகளை திறக்க கூடாது என வலியுறுத்தும் பேராசிரியர் நீலிகா மலாவிஜ்!

 


இலங்கையில் கொ​ரோனாத் தொற்றுப் பரவலானது அண்மைகாலமாகத் தீவிரமடைந்து வருகின்றது.


குறிப்பாக புதிய கொரோனா வைரஸானது அதி வேகமாகப் பரவும் தன்மையை கொண்டுள்ளதோடு இது சிறுவர்களை எளிதில் பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ்  தற்போது உள்ள நிலைமையில் பாடசாலைகளைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு தொற்றுப் பரவல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments