எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாஸவுடன் தொடர்புபட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த வாரம் சஜித் பிரேமதாஸவுடன் நெருக்கமாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நெருக்கமாக பழகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை நாடாளுமன்ற அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற மூன்று நாட்களும் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்திற்கு வருகைதந்திருந்ததுடன், 20 ஆம் திகதி இடம்பெற்ற துறைமுக சட்டமூலம் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை சஜித் பிரேமதாஸவுடன் நெருக்கமாக பழகியதை அடுத்து தாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
0 Comments