செங்கலடி நிருபர்சுபா)மட்டக்களப்பு சந்திவெளியில் இரு குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளியில் பாலையடித்தோனா பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை கருத்து மோதல் காரணமாகவே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து மோதல் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே வெட்டுக்கு இலக்காகி இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பகுதியில் தற்போது இரவு வேளைகளிலும் பெரும்பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக அப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
0 Comments