Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அச்சுறுத்தல்களுக்குள்ளான தனியார் துறை தொழில் வாய்ப்பு

 


இலங்கையில் தற்போது பரவும் கொரோனா தொற்று காரணமாக 15 ஆயிரம் தனியார் துறை தொழில் வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. சுற்றுலாத்துறை உள்ளிட்ட மேலும் மறைமுக தொழில்வாய்ப்புக்கள் பல இவ்வாறு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தொழில்களை இழப்போருக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்கீழ், மீள தொழிலை மேற்கொள்வதற்காக இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments