Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விபச்சார விடுதி முற்றுகை! தேடப்பட்டுவந்த லுனாவ பட்ரி உட்பட இரண்டு ஆண்களும் , மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது!

 


மொரட்டுவை பகுதியில் தற்காலிக அறைகளை வழங்கும் இடம் என்ற போர்வையில் விபச்சார விடுதி இயங்கி வந்த நிலையில் இங்கிருந்த ‘லுனாவே பட்டி’ (Lunawe Batti) என்று அழைக்கப்பட்டு வந்த முக்கிய நபர் உட்பட இரண்டு ஆண்களும் , மூன்று பெண்களும் இன்று (16) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸார் கட்டிடத்தை சோதனை செய்தபோது விபச்சார விடுதியின் முகாமையாளர் தப்பி ஓடிவிட்டதாக தெரியவருகின்றது. குறித்த விடுதியின் முன்பக்கம் மூடப்பட்டிருந்த நிலையில், பின்பக்க கதவுகள் மூலம் விருந்தினர் அனுமதிக்கப்பட்டு விபச்சாரம் இடம்பெற்று வந்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் விதிக்கப்பட்டு வரும் நேரத்தில் இவ்வாறான விபச்சார விடுதிகளை நடத்துவது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட களுத்துறை, லுனாவ மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments