Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முடங்கியது திருகோணமலை நகரம்!


திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் விற்பனைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப் பகுதி, கந்தளாய், மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை நகரமானது முற்றாக முடக்கப்படும் என்ற வதந்தி சமூக ஊடகங்களில் பரவிவந்ததால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments