Advertisement

Responsive Advertisement

பொது ஒன்றுக்கூடல்கள் அனைத்துக்கும் தடை...!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடல்கள் அனைத்தும் தடைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்கள் ஒன்றுக்கூடல்களான விருந்துபசாரங்கள் , கொண்டாட்ட நிகழ்வுகள் என்பவற்றை நடாத்த முடியாது. இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்காக இடவசதிகளை செய்துக் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டவடக்கை எடுப்பதுடன் , அந்த கட்டிடங்களுக்கு தடை முத்திரை குத்தப்படும்.

இதன்போது மதுபானங்களை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அந்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ரமழான் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தங்களது வீட்டில் , அவர்களது குடும்பத்தினருடன் மாத்திரமே இணைந்து கொண்டாட வேண்டும். இதன்போது மக்கள் ஒன்றுக் கூடி பள்ளிவாசல்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments