தற்போதைய சூழ்நிலையில் இலங்கையை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மூட வேண்டுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சரவையின் இணக்கத்திற்கமைய நாட்டை முழுமையாக அல்லது பகுதியாக மூடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், விவசாய, மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதி தொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில்லறை கடைகள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
0 Comments