(சர்ஜுன் லாபீர்)ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்ற நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழுக் கூட்டத்தில் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளன தீர்மானத்திற்கு அமைய பொருட்கள் கொள்வனவுக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் அருகிலுள்ள வியாபார நிலையத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பவர் என்ற சட்டத்திற்கு இணங்க இன்று (25) பயணத்தடை தளர்த்தப்பட்டதும் கல்முனை பிரதேசத்தில் அதிகளவிலான சன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தனிப்பட்ட வாகனங்களில் வியாபார நிலையங்களுக்கும்,ஏனைய அலுவல்களுக்கும் செல்லுவதற்கு கல்முனை பொலிசார் தடை விதித்து பொதுமக்களை திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்களின் சன நெரிசல் குறைக்கப்பட்டதுடன் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தங்களுடைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏற்புடையதாக இருந்தது.
0 Comments