Advertisement

Responsive Advertisement

பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

 


யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாணங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ்குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வது, பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதனடிப் படையில் போக்கு வரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள், கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்படவுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி பெற்றுத் தரப்படும் என வர்த்தகர்களுக்கும், லொறி உரிமையாளர், பொதிகள் போக்கு வரத்தில் ஈடுபடுவோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் விரைவாக படிவங்களை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  யாழ் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட படிவம் தற்போது யாழ் வணிகர் கழக பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments