ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் 19 வயிரஸ் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதனால்
மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தீர்மானங்களை மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டம் பூராகவும் சுகாதாரத்துறையினரும், முப்படையினரும் இணைந்து பல்வேறு விழிப்புணர்பு நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு இன்று 06.05.2021 ஆந் திகதி வியாழக்கிழமை சுகாதார துறையினரால் எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 35 பேரிற்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதில் எவரும் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments