Home » » தமிழ்மொழி புறக்கணிப்பினை சுட்டிக்காட்டிய சாணக்கியன்– சீன தூதரகம் உடனடி நடவடிக்கை...!!

தமிழ்மொழி புறக்கணிப்பினை சுட்டிக்காட்டிய சாணக்கியன்– சீன தூதரகம் உடனடி நடவடிக்கை...!!

 


மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகள் புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்று அமைத்துள்ள பெயர்பலகையில் தமிழ்மொழி இடம்பெறாதமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் டுவிட்டரில் பதிவொன்றினை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த இலங்கையில் உள்ள சீன தூதரகம், தமது நிறுவன பெயர்பலகையை மாற்றியமைக்குமாறு ஜே.வி. கட்டடத் தள நிறுவத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அத்தோடு இலங்கையில் உள்ள மும்மொழிக்கொள்கையை சீனா மதிப்பதாகவும் அதனையே சீன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சீன தேசிய அருங்காட்சியகத்தில் தமிழ்மொழி இணைக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டி சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |