Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் எட்டுப் பேரை தூக்கிச் சென்ற பொலிஸார்!

 


திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டுப் பேர் கந்தளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் கந்தளாய் பேராறு பகுதியில் இடம்பெற்ற இவ்விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கந்தளாய் பேராறு, மத்ரஸா நகர் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் மற்றும் தலைக்கவசம், அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் என எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் முகக்கவசம் அணியாது நின்றவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத எட்டு நபர்களை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments