மட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 )
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இவ்விபத்துபற்றி மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியில் குருக்கள்மடம் பிரதேச பிரதான வீதியூடாக கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதே வழித்தடத்தினூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இவ் விபத்து சம்பவித்திருக்கின்றது.
இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி பலியானதுடன் இருவர் பலத்த காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் இவ் விபத்திற் சிக்கிய முச்சக்கரவண்டியில் பயணித்தோர் கல்லாறு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது
இவ் விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
0 Comments