Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மூதூர் , ஒலுவில் பகுதிகளில் ஸஹ்ரான் ஹாஷிமின் அறிவுறுத்தலுக்கமைய அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய 29 வயது நபர் கைது!


ஸஹ்ரான் ஹாஷிமின் அறிவுறுத்தலுக்கமைய, அடிப்படைவாத சிந்தனைகளை போதிக்கும் விதமான வகுப்புகளை ஏற்பாடு செய்த சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாவனெல்லை, ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

இச் சந்தேகநபர், மூதூர் மற்றும ஒலுவில் பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு இவ்வாறான வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments