Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- நாவற்குடாவில் 125 நபர்களுக்கு பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை- 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கலென 10 நபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளும் 115 நபர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் நேற்று(21) முன்னெடுக்கப்பட்டன.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து 125 நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments