Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மேலதிக வகுப்புக்களுக்கு தடை- மீறி வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு நிகழ்ந்த சம்பவம்...!!

 


சுகாதார வழிகாட்டுதல்களை மீறி ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த மேலதிக வகுப்பொன்றை நிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இன்று (24) நடவடிக்கை எடுத்தனர்.


இரண்டு மேலதிக வகுப்புக்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சினால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த வழிகாட்டுதல்களுக்கு அமைய மேலதிக வகுப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோகதர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

மேலதிக வகுப்பு ஆசிரியர் முன்னிலையில் குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை வாசித்த சுகாதார பரிசோதகர்கள் பின்னர் வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்களை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments