இந்தியாவில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 2,624 பேர், நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,89,544 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் நேற்று, 2,19,838 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,38,67,997 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாடு முழுவதிலும் காணப்படுகின்ற பல்வேறு வைத்தியசாலைகளில் 25,52,940 பேர், வைரஸ் தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
0 comments: