Home » » இலங்கையில் ஆபத்தான பகுதியாக குலியாபிட்டி!! மீண்டும் அதே இடத்தில் மூன்றாவது அலை?

இலங்கையில் ஆபத்தான பகுதியாக குலியாபிட்டி!! மீண்டும் அதே இடத்தில் மூன்றாவது அலை?


குலியாபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருந்து கடந்த 20 நாட்களில் 190 கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் குலியாபிட்டியின் நிலைமை மிகவும் மோசமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் குலியாபிட்டி சுகாதார அலுவலர் உத்பல சங்கல்ப தெரிவிக்கையில்,

"தற்போது குலியாபிட்டியில் நோயாளிகளில் கடுமையான பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இங்கு எல்லா சுகாதார பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

எங்கள் பி.சி.ஆர் பரிசோதனையில் சுமார் 10 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையால் நம் இதயத்தில் பயம் ஏற்படுகின்றது. இலங்கையில் இரண்டாவது கொரோனா அலையின் போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் நோயாளிகள் பதிவான பகுதி குலியாபிட்டி ஆகும்.

இந்த கட்டத்தில் மூன்றாவது அலை இங்கே தொடங்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

மிகவும் கடுமையான நிலைமை உருவாகி வருகிறது. கடுமையான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுகிக்னறோம்.

இந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரையும் தங்கள் கடமையைச் செய்ய பி.சி.ஆர் பரிசோதனைக்கு அழைக்கிறோம்” என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |