Advertisement

Responsive Advertisement

"எல்லாம் மாறிப்போச்சு..." அகரம் செ.துஜியந்தன்



ஒரு காலத்தில்.....
ஓலைக்குடிசையில்
உறவெல்லாம் ஒன்றாகச் சேர்ந்திருந்தோம்
ஒரு அடுப்பு மூட்டி
ஒரு பானை
ஒரு சட்டி வைச்சி
ஒற்றுமையாச் சோறு கறி ஆக்கி
ஒன்றாகச் சாப்பிட்டம்!
ஒருத்தருக்கு கஸ்டம் வந்தால்
ஓடிவந்து உதவினோம்
உறவு முறை உரிமையுடன் சொல்லி
பெருமையாய் பழகினோம்!
உறவு விட்டுப் போயிடாமல்
உறவுக்குள்ள மணம் முடிச்சம்!
ஓர வஞ்சனையோ வெஞ்சினமோ
ஒருவரும் நெஞ்சிக்குள்ள வைச்சதில்ல
ஓற்றுமையாய் வாழ்ந்திருந்தம்....!.
சுனாமிக்குப் பின்னர்
உறவெல்லாம் கூறு பட்டுக்கிடக்கிறது
முகத்தில் சிரிப்பைத் தொலைத்து விட்டு
அகத்தில் அழுக்குகளோடு வாழுறாங்க!
ஒருத்தர ஒருத்தர் விழுங்குறாங்க
ஒழுக்கம் நேர்மையை மறந்திட்டாங்க
குறுக்கு வழியில் ஓடுறாங்க
ஓர்மத்துடன் வாழுறாங்க!
ஓடி ஓடி உழைக்கிறாங்க
மாடி மேல மாடி கட்டுறாங்க
தேடிவரும் உறவுகளை ஒதுக்குறாங்க
கூடி வாழும் வாழ்வை வெறுக்குறாங்க!
தனித் தனித் தீவுகளாக வாழுறாங்க
தத்துவம் பேசினா சிரிக்காங்க
தான தருமம் செய்வதை மறக்காங்க
தப்புத் தாளங்கள் செய்யுறாங்க!
இறையை நினைக்க மறக்காங்க
இன்பமாய் வாழ பறக்காங்க
இருப்பதை எல்லாம் தொலைக்காங்க
இதுவே வாழ்வென நினைக்காங்க!
பழசை எல்லாம் மறந்து
புதுசா வாழ பார்க்காங்க
புதுமைதான் வாழ்வென்று
புதினம் காட்டுறாங்க!

Post a Comment

0 Comments