Home » » சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் களைகட்டும் என்பதில் மட்டும் வர்த்தகர்கள் குறியாக இருந்தால் கொரோனா வைரஸ் பரவலடைவதை எவராலும் தடுக்க முடியாமல் போய் விடும்!!

சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் களைகட்டும் என்பதில் மட்டும் வர்த்தகர்கள் குறியாக இருந்தால் கொரோனா வைரஸ் பரவலடைவதை எவராலும் தடுக்க முடியாமல் போய் விடும்!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் வியாபாரம் களைகட்டும் என்பதில் மட்டும் வர்த்தகர்கள் குறியாக இருந்தால் கொரோனா வைரஸ் பரவலடைவதை எவராலும் தடுக்க முடியாமல் போய்விடும் என சுகாதார வைத்திய அதிகாரி ஷ‪hபிறா வஸீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டல் திங்கட்கிழமை 22.03.2021 ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெற்றது.

அந்நிகழ்வில் ஏறாவூர் நகர வர்த்தகர்கள் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி ஷ‪hபிறா வர்த்தகத்தின் அடிப்படையிலான இலாப நோக்கத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு சுகாதார வழிமுறைகளை மறந்து வர்த்தகர்கள் செயற்படுவார்களாயின் அது ஒட்டு மொத்த பிரதேச மக்களுக்கும் கேடாக அமையும்.

உடல் ஆரோக்கியத்தை இழந்து விட்டு இலாபத்தையும் வருமானத்தையும் மாத்திரம் வைத்துக் கொண்டு நாம் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா என்பதை வர்த்தகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளோர் ஆகியNhரின் மன உளைச்சலை அவர்களது குடும்பத்தினர் நிர்க்கதியாகியுள்ள நிலைமையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

அலட்சியத் தன்மை இருக்குமாயின் அதன் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவஸ்தைப்பட நேரிடும் இதனை வர்த்தகர் சமூகம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டினிறுதியில் தீபாவளி வியாபாரம் கிறிஸ்மஸ் வியாபாரம் புத்தாண்டு வியாபாரம் அதேபோல இவ்வாண்டுத் துவக்கத்தில் தைப்பொங்கல் வியாபாரம் என்பன தளர்வு கண்டது.

ஆனால் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு வியாபாரத்தில் அத்தகைய தடைகள் வராமலிருக்க வர்த்தகர்கள்தான் மிகக் கவனமாக சுய கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும்.

எமது நகரம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வர்த்தகர்கள் தங்களையும் தங்களது கடைகளில் பணிபுரிவோரையும் தங்களது வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களiயும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.” என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |