இலங்கையில் காடழிப்பு இடம்பெறுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.இதேவேளை, காடழிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்காக, இராணுவத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments